குழந்தையின் ஜனாஸாவை எரிப்பதற்காக வைத்தியசாலையிலிருந்து தகனம் செய்யும் பொரல்ல கனத்தைக்கு கொண்டு வந்து விட்டதாக திடீரென எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார்கள்.
நாங்கள் அங்கு உடனடியாக சென்றோம். நாம் சென்ற போது குழந்தையின் ஜனாஸாவை அவர்கள் எரிக்க தயாராகி விட்டார்கள். பிள்ளையின் ஜனாஸா பெட்டி எது என்று கூட எமக்கு தெரியாது. குழந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூட எங்களுக்கு அவர்கள் அனுமதிக்க வில்லை என SHORT NEWS செய்தித் தளத்திற்கு குழந்தையின் தந்தை பாஹிம் அவர்கள் வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார்.
