2021 க்கான பஜ்ஜட் பார்ட்டி நாளை (10) சபாநாயகர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு ஆளும் கட்சி, எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அழைப்பிதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக லங்கா தீப பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
பஜ்ஜட் பார்ட்டிக்காக பாராளுமன்ற ஊழியர்கள் சபாநாயகர் இல்லத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பொது நிகழ்வுகளுக்கு கலந்து கொள்ளும் நபர்களை 50 - 100 வரை சுகாதார துறை மட்டுப்படுத்தியுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள பஜ்ஜட் பாட்டி நிகழ்வுக்கு 500 நபர்களுக்கான அழைப்பிதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
