Our Feeds


Thursday, December 10, 2020

www.shortnews.lk

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை போடுபவர்கள் 58 நாட்கள் மது அருந்தக் கூடாதாம்.

 



கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அனா போபோவா கூறியுள்ளார்.


தான் தயாரித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் செலுத்த ரஷ்யா. தயாராகியுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தடுப்பு மருந்தை 21 நாட்கள் இடைவெளியில் இருதடவைகள் செலுத்த வேண்டும் என்பதால், 42 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என ரஷ்யாவின் பிரதிப் பிரதமர் டாட்யானா, கோலிகோ கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்நிலையில், தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், முதலாவது தடுப்பூசி போட்டபின்  42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என்று ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அனா போபோவா  (Anna Popova) நேற்று  தெரிவித்துள்ளார் என ரஷ்யாவின் மொஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி போட்டபிறகு உடம்பில் எதிர்ப்புசக்தி உருவாவதை மதுபானம் பாதிக்கும் என்பதால், குறிப்பிட்ட காலம் வரை மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார், 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »