Our Feeds


Thursday, December 10, 2020

www.shortnews.lk

நேற்றும் கொழும்பில் 357 கொரோனா தொற்றாளர்கள் கம்பஹா 219, கண்டி 38

 



கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 697 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,074 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 357 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 219 பேரும், கண்டி மாவட்டத்தை சேர்ந்த 38 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் வௌிநாட்டில் இருந்து வந்த மூவரும் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டிருந்தார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26,512 ஆக அதிகரித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலங்களில் 542 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,‍799 ஆக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் 8,131 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகினறனர்.

நேற்றைய தினம் இரண்டு கொவிட் தொற்று காரணமாக இருவர் பதிவாகியிருந்த நிலையில் இதுவரை 144 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று நாட்டினுள் மேற்கொள்ளப்பட்ட 14,336 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »