Our Feeds


Saturday, December 12, 2020

www.shortnews.lk

கல்முனையின் சாய்ந்தமருதில் கொரோனா தாக்கம் உக்கிரம்: டாக்டர் அஜ்வத்

 



அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு அடுத்ததாக சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்கள் கொரோனா தொற்றுக்கு அதிகம் முகம்கொடுக்கும் பிரதேசங்களாக மாற அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து சென்று தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சாய்ந்தமருது, மற்றும் கல்முனை பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட (Lock Down) பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் சாத்தியம் அதிகமுள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். அஜ்வத் தெரிவித்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விழிப்புணர்வுக் கூட்டம் இன்று (12) சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். அஜ்வத் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஜ்வத் மேலும் தெரிவிக்கையில்,
சாய்ந்தமருது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் உக்கிரமடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனவைரது பங்களிப்பும் அவசியம்.

இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கு மக்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்

கிராமிய மட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர்கள் எங்களுக்கு உதவ வேண்டும்
தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்த்தல், விசேடமாக சிறுவர்கள், பெரியவர்கள் வெளியேறுதலை முற்றாகத் தவிர்த்தல், வீதிகள், தெருக்கள், சந்திகளில் மைதானங்களில் தேவையின்றிக் கூடுதல் விளையாடுதல் என்பனவற்றை தவிர்த்தல் உட்பட ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும்.

இதேவேளை, சுகாதார நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறானவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸ் மற்றும் முப்படையினர், சுகாதார துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.

இந்த நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே. எம். நிஸ்தார், சாய்ந்தமருது பிரதேச கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »