Our Feeds


Wednesday, December 23, 2020

www.shortnews.lk

பௌத்தர்களின் இறுதி சடங்கைக் கூட அரசாங்கம் இல்லாமலாக்கிவிட்டது - எதிர்கட்சி தலைவர் சஜித் குற்றச்சாட்டு

 



அரசு,அறிவியலுக்குப் பதிலாக கட்டுக்கதைகளைத் தொடர்கிறது என்றும் அதன் மூலம் அனைத்து சமூகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) கூறினார். "வலுக்கட்டாய தகனத்தை திறுத்தவும் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும்”என்ற கருப்பொருளில் பொறளை மயானம் முன் இடம் பெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.  


உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளையும், பக்கச்சார்பற்ற குழுவின் பரிந்துரைகளையும் அரசாங்கம் புறக்கணித்து வருவதாகவும், இது இனம் அல்லது மதம் சார்ந்த விடயம் அல்ல என்றும் அவர் கூறினார்.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »