Our Feeds


Wednesday, December 23, 2020

www.shortnews.lk

கொரோனானா உடல்களை எரிப்பதா? அடக்குவதா? என்ற பிரச்சினையை தீர்ப்பது அரசின் கடமையாகும். - ரனில்

 



கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்குவதா? அல்லது எரிப்பதா? என்பது அவரவர் உரிமையாகும். இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்க முன்னால் பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைத்து மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடி அரசு ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும் என முன்னால் பிரதமரும் ஐ.தே.க வின் தலைவருமான ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இறந்தவர்களை கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்கிறார்கள். முஸ்லிம்களும் அடக்கம் செய்கிறார்கள். அது அவர்களின் மத வழிகாட்டல் என்பதால் நாமும் அதனை மதிக்கிறோம். அதே போல் பௌத்தர்களும் இந்துக்களும் கூட அடக்கம் செய்யப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, எரிக்கப்படும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. 


இந்த தனிப்பட்ட முடிவுகளை நாம் மதிக்க வேண்டும். ஐ.தே.க எப்போதும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையையே விரும்புகின்றது. கொரோனானா உடல்களை எரிப்பதா? அடக்குவதா? என்ற பிரச்சினையை தீர்ப்பது அரசின் கடமையாகும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »