கொவிட் இரண்டாவது அலையில் கொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட்
தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,000 ஐயும் தாண்டியது. நேற்றைய முன்தினம்
பதிவான 266 பேரும் இதில் அடங்குவர்.
இதன்படி அக்டோபர் 4 ஆம் திகதிக்குப் பின்னர் கொழும்பு மாவட்டத்தில்
இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 15,123 ஆகும்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் 99 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 94 பேரும்,
களுத்துறை மாவட்டத்தில் 48 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேர்
மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 27 பேரும் நேற்றைய முன்தினம் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் 11 பேரும், மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில்
தலா 8 பேரும், புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தலா 4 பேருமாக,
நேற்றைய முன்தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்
அத்துடன் காலி மாவட்டத்தில் 3 பேரும், நுவரெலியா, அனுராதபுரம் மற்றும்
பொலன்னறுவை மாவட்டங்களில் தலா 2 பேரும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை
மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் நேற்று பதிவாகியுள்ளனர். மற்றும் ஏனைய 5
பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள.
Friday, December 18, 2020
கொழும்பு மாவட்ட கொவிட் விபரம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
