Our Feeds


Friday, December 18, 2020

www.shortnews.lk

மரணங்களின் கொத்தணி உருவாகக் கூடும் - வைத்தியர் ஹரித அலுத்கே

 

சனத்தொகையை அதிகமாகக் கொண்ட பிரதேசங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இவ்வாறான பிரதேசங்கள் ஊடாக மரணங்களின் கொத்தணி உருவாகக் கூடும். எனவே இவை தொடர்பில் உரிய தீர்மானங்கள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் மக்கள் பொறுப்பற்று செயற்படுவார்களாயின் முழு நாட்டையும் முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

உயிரிழப்புகளில் குறிப்பிடத்தக்களவானவை கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலேயே பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்

 


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »