உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்காக உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி வட்டிலப்பம் எடுத்து சென்றமை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் ரிழா தலைமையில் உலமா சபை சார்பில் உள்ள விசாரணைக்கு குழு அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேலை உலமா சபையின் முன்னால் உப செயலாளர் அஷ்ஷெய்க் முர்ஷித் முலப்பர் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு சென்ற நேரத்தில் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த ஞானசார தேரரின் விசாரனையை ரகசியமாக வீடியோ பதிவு செய்து மாட்டிக் கொண்டார்.
இது தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளதாக கூறி 10.09.2020 அன்று உலமா சபை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால், அவர் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் உலமா சபை அறிவிக்க வில்லை.
கடந்த 2 மாதங்களுக்குள் உலமா சபை பெரும் சர்சைகளுக்குள் சிக்கியுள்ளது.
ஜனாதிபதி கமிஷனில் வீடியோ எடுத்து அதன் உப செயலாளர் மாட்டிக் கொண்டமை.
ஜனாதிபதி கமிஷனுக்கு வட்டிலப்பம் கொண்டு சென்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாக சர்சையானமை.
ஜனாஸா அடக்கத்திற்கு அரசாங்கம் அனுமதி தந்து விட்டது எனக் கூறி அவசரமாக ரிஸ்வி முப்தி ஓடியோ வெளியிட்டமை போன்றவை உலமா சபையின் தொடர் சர்சைகளாக மாறியுள்ளது.
