Our Feeds


Friday, December 25, 2020

www.shortnews.lk

VIDEO: நாங்கள் ஆள கேட்க்கவில்லை. ஆறடி மண்ணில் ஜனாஸா அடக்கவே கேட்கிறோம் - யாழ். ஆர்பாட்டத்தில் பைசல் மதனி

 



நாங்கள் ஜனாஸா அடக்கத்தான் கேட்கிறோம். அது இனவாதமோ, மதவாதமோ, அடிப்படைவாதமோ அல்ல. நாம் நாட்டை ஆள கேட்க்கவில்லை ஆறு அடி மண்ணில் எமது ஜனாஸாக்களை புதைக்கத்தான் கேட்கிறோம் என இன்று (25) யாழ்பானம் சோனகர் தெரு ஐந்து சந்தியில் நடைபெற்ற ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பைசல் மதனி கருத்து வெளியிட்டார்.


இன்று இலங்கையில் ஜனாஸாக்களை எரிப்பவர்கள் தான் அடிப்படை வாதத்தையும், மத வாதத்தையும் உண்டாக்குகின்றார்கள். இன்று பௌத்த துறவிகள் கூட நீதியாக சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். ஞானசார தேரர் கூட நேர்மையாக அடக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இந்த நாட்டை ஆள வேண்டும் என நாம் கேட்க்வில்லை. ஆறு அடி மண்ணில் எமது உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என்று தான் கேட்க்கிறோம். இது எமது அடிப்படை உரிமை என அவர் மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »