Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

இஸ்ரேலின் தாக்குதலினால் பலஸ்தீனில் ஒரு மணித்தியாளத்தில் 03 சிறுவர்கள் காயமடைகிறார்கள்.

 



காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தொண்டு அமைப்பு இது தொடர்பிலான விடயத்தினைத் வெளியிட்டுள்ளது.

காஸாவில் 366 சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதற்கமைய மோதல் ஆரம்பித்தது தொடக்கம் காஸாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று சிறுவர்கள் காயமடைந்து வருகின்றனர்.

ஒரு வாரத்தில் காஸாவில் சுமார் 60 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »