Our Feeds


Sunday, May 23, 2021

www.shortnews.lk

எதிர்வரும் 29, 30ஆம் திகதிகளில் பயணத்தடை?

 

 எதிர்வரும் 29, 30ஆம் திகதிகளில் பயணத்தடை விதிப்பதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 27ஆம் திகதி மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், அன்றைய தினம் பொதுமக்கள் உணவு கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியேறிச் செல்லுமாறு இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த திணத்தில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல வேண்டுமெனவும், பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் முகமாக அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை. எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், 29 மற்றும் 30ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பில் 27ஆம் திகதி நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »