கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தற்போது பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (31) முதல் மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூன்று கட்டங்களின் அடிப்படையில், இவ்வாறு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
