Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நீடிப்பது தொடர்பில் இராணுவத்தளபதி!

 

 நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பது தொடர்பில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாக வெளியாகிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »