Our Feeds


Friday, May 14, 2021

www.shortnews.lk

இன்று இலங்கையில் 31 பேர் கொரோனாவில் மரணம் - அதிகூடிய உயிரிழப்புகள் பதிவு

 



இலங்கையில் ஒரே நாளில் வெளியான அதிகளவிலான கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்பிலான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி, இறுதியாக 31 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.


இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 923 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 108 பேர் குணமடைந்துள்ளனர்.


அத்துடன், 27 ஆயிரத்து 54 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு கூறுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »