அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை தனியார் பஸ்வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்ற பஸ்வண்டியை அம்பாறை இங்கினியாகல நாமல் ஓயா பிரதேசத்தில் வைத்து நேற்று (30) இரவு பொலிஸார் மடக்கி பிடித்து அதில் பிரயாணித்த 48 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயணக்கட்டுப்பாட்டை மீறி குறித்த பஸ்வண்டியை சம்பவதினமான நேற்று இரவு இங்கினியாகல நாமல் ஓயா வீதியில் பிரயாணித்த தனியார் பஸ்வண்டியை பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டபோது அவர்கள் பயணக்கட்டுப்பாட்டு தடையை மீறி கொழும்புக்கு செல்லவதாக கண்டறிந்தனர்
இதனையடுத்து குறித்த பஸ்வண்டியில் பிரயாணம் செய்த மற்றுட் பஸ்வண்டி சாரதி நடத்துனர் உட்பட அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 48 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்
