கம்பஹா நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் முதலாம் தரத்திற்கு மாணவியொருவரை இணைத்துக்கொள்ளாமையின் ஊடாக, அவருக்கு 2 வருடங்கள் கல்வியை தொடர முடியாது போன காரணத்தினால் அந்த மாணவிக்கு ஏற்பட்ட அசாதாரணத்தை கருத்திற்கொண்டு, அவருக்கு 5 லட்சம் ரூபா நட்டஈட்டை வழங்குமாறு உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலாம் தரத்திற்கு மாணவியை இணைத்துக்கொள்ளாமையின், அந்த மாணவியின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளை, பாதிக்கப்பட்ட குறித்த மாணவியை அதே பாடசாலையின் முதலாம் தரத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
