Our Feeds


Saturday, May 22, 2021

SHAHNI RAMEES

அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பில் – கண்டியில் 8000தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் பதிவு (முழு விபரம் இணைப்பு

 


    கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 800 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 44,677 கொவிட் தொற்றாளர்கள்; கடந்த ஒக்டோபர் மாதம் 4ம் திகதி முதல் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 617 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் 29,186 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்கள் 30 ஆயிரத்தை எட்டவுள்ளது,

கண்டி மாவட்டத்தில் 8000தை தாண்டி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் 172 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கண்டி மாவட்டத்தில் இதுவரை 8008 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »