Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

சொந்த வாகனத்தில் செல்வோர் – முகக் கவசத்தை அணியும் விதம்? – பொலிஸாரின் தெளிவூட்டல்

 



சொந்த வாகனங்களில் செல்வோர் முகக் கவசங்களை அணிய வேண்டிய அவசியம் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.


மனைவி, குழந்தைகளுடன் ஒருவர் செல்வாராயின், அவர் முகக் கவசத்தை அணிய வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.


எனினும், வேறொரு வீட்டிலுள்ள உறவினர்களுடன், சொந்தமான வாகனத்தில் செல்லும் போது முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என அவர் கூறுகின்றார்.


அதைவிடுத்து, ஏனைய வாகனங்களில் செல்வோர் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.


வாகனத்தில் செல்வோர் முகக் கவசத்தை அணியாது பயணிக்கும் போது, பாதுகாப்பு பிரிவினர் வாகனத்தை நிறுத்தினால், முகக் கவசத்தை அணிந்தே அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »