குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களை கைதுசெய்யும் நோக்குடன், பொலிஸ் அதிகாரிகள் சீருடைகளில் கமராக்களை பொருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கமரா பொருத்தும் திட்டத்தின் ஊடாக, குற்றவாளிகளை கைது செய்யும் போது தகவல்களை மறைப்பதற்கு முடியாது போகும் என அரசாங்கத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த கமராக்களை இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
