தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பிறந்தநாள் விருந்துபசார நிகழ்வொன்றை நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த கொழும்பு ஷங்கிரில்லா நட்சத்திர விடுதியின் முகாமையாளர் மற்றும் பணிப்பாளர் சபைக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த விருந்துபசார நிகழ்வில் 25 முதல் 30 வரையானோர் கலந்துக்கொண்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இதன்படி, பொலிஸாரினால் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக, 12 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொண்ட ஏனையோரை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக, ஷங்கிரில்லா நட்சத்திர விடுதியின் சி.சி.டி.வி கமரா ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
