Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

அத்தியாவசிய சேவைக்கான கடிதம் விநியோகிக்கும் நிறுவன பிரதானிகளுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

 



காரணமின்றி அத்தியாவசிய கடமைகளுக்காக கடிதங்களை விநியோகிக்கும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுகக் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


இதேவேளை, இன்று அதிகாலை 6.30 முதல் 10.30 வரையான காலப் பகுதியில் மேல் மாகாணத்திற்குள் 55,944 வாகனங்கள் பிரவேசித்துள்ளன.

இவ்வாறு மேல் மாகாணத்திற்குள் வருகைத் தந்த வாகனங்களில் அதிகளவானவை சுகாதார சேவையுடன் தொடர்புடையவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், 3528 வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக வருகைத் தந்த வாகனங்கள் கிடையாது என்பது உறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »