Our Feeds


Wednesday, May 19, 2021

www.shortnews.lk

கொரோனாவுக்கு எதிராக புதிய ஒற்றை டோஸ் தடுப்பூசி! - சீனாவின் மற்றுமொரு சாதனை.

 



கொரோனாவுக்கு எதிரான சீனாவின் தடுப்பூசி பிரச்சாரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றை-டோஸ் தடுப்பூசி கடுமையான பாதிப்புகளைத் தடுப்பதில் 90 சதவீத செயல்திறனை பதிவு செய்கின்றதாக மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.


இந்த ஒரு-ஷாட் COVID-19 தடுப்பூசி ஊசி போடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு 95.47 சதவிகித செயல்திறன் விகிதத்தை பதிவுசெய்கிறது என்று கூறுகின்றன.

தடுப்பூசி போடப்பட்ட 28 நாள் கண்காணிப்பு காலத்திற்கு, செயல்திறன் விகிதம் 90.07 சதவீதமாக மாறும்.

கிழக்கு சீன நகரமான ஷாங்காய் மே 13 முதல் கொரோனா வைரஸுக்கு எதிரான அதன் பாரிய தடுப்பூசி திட்டத்தில் ஒற்றை டோஸ் தடுப்பூசிகளை பயன்படுத்துகிறது.

இராணுவ அறிவியல் அகாடமியின் சென் வீ மற்றும் சீன உயர் தொழில்நுட்ப உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான கேன்சினோ பயோலாஜிக்ஸ் இன்க் தலைமையிலான ஒரு ஆராய்ச்சி குழு இணைந்து இதை உருவாக்கியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு முதல் எட்டு டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் இதை கொண்டு சென்று சேமிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »