Our Feeds


Wednesday, May 19, 2021

www.shortnews.lk

கொரோனாவிற்கு எதிராக உணவு வகை? – எந்தளவு உண்மை உள்ளது?

 



கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர், தமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதற்காக பல்வேறு உணவு வகைகளை உட்கொள்ளுமாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் உணவுகளின் ஊடாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு வைத்திய பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.


சரியான நேரத்தில் சரியான உணவுகளை உட்கொள்வது மாத்திரமே சிறந்தது என அவர் கூறுகின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சரியான நேரத்தில் சரியான உணவுகளை உட்கொள்வதன் ஊடாக உடலுக்கு தேவையான விட்டமீன்கள் உள்ளிட்ட சக்திகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »