Our Feeds


Wednesday, May 19, 2021

www.shortnews.lk

மதுபானத்தில் நச்சுத் திரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் பெண் கைது!

 



(கனகராசா சரவணன்)


மதுபானத்தில் நச்சுத் திரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண், கடந்து இரு வாரங்களுக்கு முன்னர் அவரது கணவன் மதுபானம் அருந்தும் போத்தலில் நச்சு திரவத்தை கலந்துள்ள நிலையில், அவர் அதனை அருந்திய நிலையில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் அருந்திய மதுபானத்தை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்தபோது அதில் நச்சுத் திரவம் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்து குறித்த நபரின் 51 வயதுடைய மனைவியான பெண்ணை சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »