2020/2021ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம், இந்த மாதம் 21ம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
கடந்த ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றி, பெறுபேறுகள் வெளியாகியுள்ள மாணவர்கள், தமது விண்ணப்பத்தை இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கின்றார்.
மாணவர்களினால் நிரப்பப்படும் படிவத்தின் பிரதியொன்றை எடுத்து, அதில் கையெழுத்திட்டு, apply2020@UGC.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அதனை அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற மாணவர்களுக்கான கையேட்டை அன்றைய தினமே நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறுகின்றார்.
இதன்படி, இந்த கையேட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கின்றார்.
மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம், எதிர்வரும் ஜுன் மாதம் 11ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
