Our Feeds


Wednesday, May 19, 2021

www.shortnews.lk

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி?

 



இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைவதன் காரணமாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கொழும்பு ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இதை தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் தொற்று உறுதியானவர்களில் சிறுவர்கள் அதிகளவில் பதிவாகின்றனர்.

இந்நிலையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »