Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களை விடவும், மூன்று மடங்கு தொற்றாளர்கள் சமூகத்திற்குள் இருக்க முடியும்

 



நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களை விடவும், மூன்று மடங்கு கொவிட் தொற்றாளர்கள் சமூகத்திற்குள் இருக்க முடியும் என ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய் தடுப்பு மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.


இவ்வாறு சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொவிட் தொற்றாளர்களின் ஊடாக, மேலும் இந்த வைரஸ் ஏனையோருக்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் 3500ற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சமூகத்திற்குள் அதைவிடவும் மூன்று மடங்கு தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என அவர் கூறுகின்றார்.

இவ்வாறானவர்களின் ஊடாக, சமூகத்திற்குள் கொவிட் தொற்று மேலும் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் அச்சம் வெளியிடுகின்றார்.

மக்களை வீடுகளில் இருக்குமாறு கூறினாலும், அவர்கள் வீட்டிற்குள் இருப்பதில்லை என கூறிய அவர், வீதிகள் வெறிச் சோடி காணப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளை விட்டு வெளியில் வருமாறு இராஜாங்க அமைச்சர் மக்களிடம் கேரிக்கை விடுக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »