Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

இலங்கையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம்

 



மாலைத்தீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.


மாலைத்தீவிலிருந்து தென் மேற்கு திசையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

5.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு அண்மித்த கடற் பிராந்தியத்திலேயே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எனினும், நிலநடுக்கம் பதிவான பகுதி, மாலைதீவை அண்மித்துள்ளமையினால், இலங்கைக்கு பாதிப்புக்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »