கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம்மிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை வர உடன் அமலுக்குவரும் வகையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை கூறுகின்றது.
வியட்நாமில் தற்போது வேகமாக பரவிவரும் கொவிட் தொற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
