Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

கொட்டகலையில் 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

 



கொட்டகலை பொரஸ்ட்க்ரீக் தோட்டத்தைச் சேர்ந்த 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


குறித்த பகுதியில் 72 வயதான முதியவரொருவர் நேற்று உயிரிழந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »