PCR பரிசோதனைகளின் பின்னர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, நோய் அறிகுறிகள் இல்லாத நபர்களை தமது வீடுகளிலேயே தங்க வைத்து, சிகிச்சை அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதாரம், தொற்று தடுப்பு மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
எனினும், கொவிட் பரிசோதனைகளின் போது ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுமாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
