Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

கொழும்பு PORT CITY பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றில் வெற்றி - ஆதரவாக 148 எதிராக 59 வாக்குகள்.

 



கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேறியது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் கடந்த 2 நாட்களாக பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 89 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு அரச கட்சிகள் அனைத்தும் ஆதரவு வழங்கியதுடன் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றுதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்திருந்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »