Our Feeds


Saturday, May 22, 2021

www.shortnews.lk

PORT CITY அரியாசனத்தில் அமரப்போவது பஸில்?

 



கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்ட்  சிட்டி சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து போர்ட் சிட்டி ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளதோடு முதலீடுகளும் சேர்க்கப்படவுள்ளன.

இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களை தொடர்புபடுத்தவும், ஈர்ப்பதற்கும் பஷில் ராஜபக்ஷவுக்கு திறமை இருப்பதாக சுட்டிக்காட்டிவரும் அரச உயர்பீடம், ஆணைக்குழுவின் முதல் பணிப்பாளராக அவரை நியமிப்பதற்கும் கலந்துரையாடியிருப்பதாக கூறப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »