Our Feeds


Monday, June 7, 2021

SHAHNI RAMEES

புத்தாண்டு கொத்தணியில் 113,479 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

 


இலங்கையில் இதுவரை 205,333 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் 2,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவருமே புத்தாண்டு கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

திவுலபிட்டிய, பேலியகொடை, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொத்தணிகளில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 198,654ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு கொத்தணியில் மாத்திரம் 113,479 பேர் கொவிட் தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக் கொத்தணியில் 6,355 பேரும், பேலியகொடை கொத்தணியில் 82,785 பேரும் திவுலபிட்டிய கொத்தணியில் 3059 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 4,447 இலங்கையர்களுக்கும், 318 வெளிநாட்டவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் கொழும்பு மாவட்டத்திலேயே இதுவரையில் அதிகபடியான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை வரையான தகவல்களின்படி கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 51,532 கொவிட் தொ்றறாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், சுகாதார அமைச்சின் தகவல்படி நேற்று 20,403 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய நிலைமையில் 36,333 பேர் கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

1453 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

நேற்றைய தினம் 1,172 பேர் நேற்று கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறினர்.

இதன்படி இதுவரையில் மொத்தமாக 167,304 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »