Our Feeds


Monday, June 7, 2021

SHAHNI RAMEES

வைத்தியர் என்ற போர்வையில் கஞ்சா கடத்திய சந்தேகநபர் கைது

 


வைத்தியர் என்ற போர்வையில் காரில் ஒருதொகை கஞ்சாவை கடத்திச் சென்ற நபரொருவரை, மருதானைப் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவரிடமிருந்து 38 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் வைத்தியர் அல்லவென தெரியவந்துள்ளது.

இதேவேளை, மருதானை பகுதியில், கடற்படை வீரர்கள் பயன்படுத்தும் ஆடையணிந்திருந்த நபரொருவரிடமிருந்து ஐஸ் மற்றும் கஞ்சா ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

இவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 610 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »