கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இறுதியாக 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிக்கின்றது.
இறுதியாக பதிவான மரணங்களுடன், இலங்கையில் பதிவான மொத்த கொவிட் உயிரிழப்புக்கள் 1566ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 547ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 30,267 பேர் சிகிச்சைகளை பெற்று வரும் அதேவேளை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 714 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
