Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

கம்பஹா வைத்தியசாலைக்கு 46 லட்சங்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய SJB

 



கம்பஹா மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 'எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' திட்டத்தின் ஓர் அங்கமாக சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் ஆரோக்கியமான ஓர் தேசத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட 'ஜன சுவய' திட்டத்தின் 14 ஆவது கட்டமாக ரூ.4,650,000.00 நாற்பத்தி ஆறு இலட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்புள்ள மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக இன்று(15) வழங்கி வைக்கப்பட்டன.எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் கம்பஹா  மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.


அதன்படி ரூ.450,000.00  மதிப்புள்ள Multipara Monitors மூன்றும், 1,35,0000.00 மதிப்புள்ள Optiflow Nasal Therapy இரண்டும்,600,000.00 மதிப்புள்ள Centralized Oxygen Delivery System ஒன்றும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.


கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு, அமைப்பாளர்கள், உறுப்பினர்கள்,கட்சியின் வெளிநாட்டு கிளைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆதரவாளர்கள் இனைந்ததாக "ஜன சுவய" திட்டம் மற்றும் "எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு" திட்டத்தை செயல்படுத்துகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »