இவ்வருடம் 50 இலட்சம் டோஸ் பைஸர் கொவிட்19 தடுப்புமருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்முதல் தொகுதியாக 3 லட்சம் டோஸ் பைஸர் தடுப்பு மருந்து ஜுன் மாதம் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்தடுப்பூசி அமெரிக்காவின் பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோஅன்ட்டெக் நிறுவனங்களால் இணைந்து தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
