ஈரானிய கடற்படையின் மிகப் பெரிய கப்பல் தீக்கிரையாகிய நிலையில் இன்று புதன்கிழமை கடலில் மூழ்கியுள்ளதாக ஈரானிய கடற்படை தெரிவித்துள்ளது,
கார்க் (Kharg -IRIS Kharg) எனும் இக்கப்பல் ஓமான் வளைகுடாவில் இக்கப்பல் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இக்கப்பல் செவ்வாய்க்கிழமை தீப்பற்றியது. தீயை அணைக்கும் முயற்சிகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.
எனினும், இக்கப்பல், ஓமான் வளைகுடாவில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில், ஈரானியத் தலைநகர் தெஹ்ரானிலிருந்து 1270 கிலோமீற்றர் தொலைவிலு;ளள ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகில் இன்று மூழ்கியது என ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கார்க் கப்பலானது, கடலில் வைத்து ஏனைய கப்பல்களுக்கு எரிபொருள் மற்றும் ஏனைய விநியோகங்களை மேற்கொள்ளக்கூடிய வகையிலான கப்பலாகும். ஈரனானிய கடற்படையிலுள்ள மிகப் பெரிய கப்பல் இது எனத் தெரிவிக்கப்படகிறது. இதன் நீளம் 207 மீற்றர் (679 அடி) என்பது குறிப்பிடத்தக்கது.
1977 ஆம் ஆண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட இக்கப்பல் 1984 ஆம் ஆண்டு ஈரானிய கடற்படையில் இணைந்தது. இக்கப்பல் தீப்பற்றியமைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.


