Our Feeds


Sunday, June 6, 2021

www.shortnews.lk

5000ம் ரூபா நிவாரணம் கிடைக்காதவர்கள் பிரதேச செயலக பிரிவில் தெரிவித்து பெற்றுக் கொள்ள முடியும் - தீபன்

 



கொவிட் - 19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணம் எல்லோருக்கும் வழங்கபட வேண்டும். இவ் நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் நிதியை பெறாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். எனவே இது சம்பாந்தமக பிரதேச செயலக பிரிவின் ஊடாக முறையீடு செய்ய முடியும். 


எனவே இந்த நிவாரண நிதி வழங்களில் ஏதேனும் முறைபாடுகள், மோசடிகள் இருப்பின் 1965 என்ற விசேட இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாளிக்க முடியும். 


அன்றாடம் தொழில் செய்து தமது பொருளாதாரத்தை ஈட்டி குடும்பங்களை நடத்துகின்ற தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர் . எனவே எனது தொப்புள்கொடி உறவுகளுக்கு உரிய முறையில் 5000 ரூபா நிவாரண தொகை கிடைக்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் செயல்படட வேண்டும் என சமூகஆர்வளர் தீபன் தெரிவித்துள்ளார் .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »