Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

ரனில் விக்கிரமசிங்கவினால் 50 உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாது - ராஜித சேனாரத்ன.

 



ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந்தவர்களை ரணில் விக்ரமசிங்க தவறாக வழிநடத்த கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

கட்சியின் புதிய உறுப்பினர்களை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடா என்றும் அது சாத்தியமற்ற விடயம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தியை எதிர்கொள்ள முயற்சி செய்யுமாறும் அவர் தெரிவித்தார்.

ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக 50 உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் ஒரு மூத்த அரசியல்வாதியாக ரணில் விக்ரமசிங்க இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்வார் என நம்புவதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »