6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
