Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

பிரதான நகரங்களில் இன்று வெள்ளம் ஏற்படும் அபாயம். - நீர்பாசன திணைக்களம் எதிர்வு கூறியது.

 



நாட்டில் பல பகுதிகளுக்கு இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், பல நகர் பகுதிகளுக்கு சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


களு, களனி மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவிக்கின்றது,

இதனால், கம்பஹா, மினுவங்கொட, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளுக்கு சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »