Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

நாடு முழுவதுமுள்ள சதோச விற்பனை நிலையங்கள் இனி தினமும் திறந்திருக்கும்.

 



நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் இன்று (03) முதல் தொடர்ந்து நாளாந்தம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு சதொச விற்பனை நிலையங்கள் அத்தியவசிய தேவையாக வர்த்தமானி அநிவித்தல் வௌியிடப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நடமாடும் வியாபாரிகளுக்கு சதொச ஊடாக குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று மற்றும் நாளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வியாபாரிகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »