Our Feeds


Thursday, June 10, 2021

www.shortnews.lk

பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் 720 கொரோனா மரணங்கள்.

 



நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 21ம் திகதி முதல் நேற்று நள்ளிரவு வரை 720 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிக்கின்றது.


அத்துடன், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் மாத்திரம், 55 ஆயிரத்து 928 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.

பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகவே 2,500யை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 9 தினங்களில் மாத்திரம் 25,000தை கடந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »