உலகின் முன்னிலை இணையத்தளங்கள் பல இன்று முடக்க நிலைக்குள்ளாகின.
நியூ யோர்க் டைம்ஸ், சி.என்.என், பிபிசி தி கார்டியன், பைனான்ஷியல் டைம்ஸ் முதலான ஊடக இணையத்தளங்கள் உட்பட பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட இணையத்தளங்களில் “Error 503 Service Unavailable”. என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்க இணயைத்தளம், அமேஸான் இணையத்தளம் ஆகியனவும் முடங்கின.
எனினும் மேற்படி இணையத்தளங்களில் பல மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.
மேற்படி முடக்க நிலையானது, கிளவுட் கம்யூட்டிங் சேவையை வழங்கும் ஃபாஸ்ட்லீ (Fastly) எனும் அமெரிக்க நிறுவனத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தான் ஆராய்ந்து வருவதாக பாஸ்ட்லீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
