Our Feeds


Friday, June 18, 2021

www.shortnews.lk

நாளையும், நாளை மறுதினமும் பொலிஸ் முன்னெடுக்கவுள்ள முக்கிய நடவடிக்கை

 



நாளையும், நாளை மறு தினமும் வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் சிறப்பு தொலைபேசி மூலமான கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.


நாளை மற்றும் நாளை மறுதினம் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்களைக் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் சிறப்பு ட்ரோன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »