பலாங்கொடை ராஸ்சகல பிரதேசத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) மாலை 4.30 மணியளவில் பலாங்கொடை ராஸ்சகல பிரதான வீதியில் எல்லவத்த பகுதியில் பஸ் ஒன்று 250 அடி பள்ளத்தில் விழ்ந்து விபத்துக்குள்ளானது.
பலாங்கொடை பின்னவல பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவந்த தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் விபத்துக்குள்ளான போது பஸ்ஸில் சாரதி மட்டுமே இருந்துள்ளார்.பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதியை பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாரதி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை பின்னவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருபவில பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த ஸ்ரீ அத்தநாயக்க என்னும் 46 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்ததாக பலாங்கொடை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
க.மஹிந்த குமார்- பலாங்கொடை நிருபர்
(தமிழன்)
